Tuesday 12 April 2016

ஆப்பிள் வயது 40

#ஆப்பிள் நிறுவனத்தை ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வாய்னஸ்க், ரொனால்ட் ஆகிய மூவரும் இணைந்து 1976-ம் ஆண்டு தொடங்கினார்கள்.

# தற்போது 17 நாடுகளில் 475 ஆப்பிள் விற்பனை நிலையங்கள் உள்ளன. 

# ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் ஐபேட், ஆப்பிள் ஐபோன், ஆப்பிள் மேக், ஆப்பிள் பேட்டரி சார்ஜர் என பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது. 

# ஆப்பிள் நிறுவனம் 1976-ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் முதன் முதலில் ஆப்பிள் 1 என்ற தனிநபர் பயன்படுத்தும் கம்ப்யூட்டரை வடிவமைத்தனர். ஹோம்ரூஃப் என்ற கணினி ஆய்வகத்தில் முதன் முதலில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. 

# பல புதிய தொழில்நுட்பங்களுடன் ஆப்பிள் 1 கம்ப்யூட்டரை ஸ்டீவ் ஜாப்ஸ் வடிவமைத்திருந்தார். இந்த ஆப்பிள் 1 கம்ப்யூட்டரின் அன்றைய விலை 666.66 டாலர். 

# ஸ்டீவ் ஜாப்ஸ் தயாரித்த ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் 2014-ம் ஆண்டு 6,02,41,325 ரூபாய்க்கு 2014-ம் ஆண்டு ஏலம் விடப்பட்டது. 

# இன்று இளைஞர்கள் முதல் முதியவர்கள் விரும்பும் ஐபோனை ஆப்பிள் நிறுவனம் மேக்வேர்ல்டு எக்ஸ்போவில் 2007-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. 

# 1984-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் மெக்கின்டாஷ் என்ற மற்றொரு தனிநபர் கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தியது. இது அந்நாளில் அமெரிக்காவில் கணினி புரட்சியை ஏற்படுத்தியதே என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தொழில்நுட்பத்திறனை மேம்படுத்தி இந்த கம்ப்யூட்டர் உருவாக்கப்பட்டிருந்தது. இது ஆப்பிள் நிறுவனத்தின் `மாஸ்டர் பீஸ்’ என்று சொல்லப்படுகிறது. 

# 1997-2007 ஆப்பிள் நிறுவனத்திற்கு பொற்காலம் என்றே சொல்லலாம். இதற்கு முன் சில ஆண்டுகள் சரிவை சந்தித்து வந்த நிறுவனம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது இந்த ஆண்டுகளில்தான். பல புதிய பொருட்களை அறிமுகம் செய்து விற்பனையை பெருக்கியது. எடிட்டிங்க்கு பயன்படுத்தக் கூடிய பைனல் கட் ப்ரோ, புதிய வகை கம்ப்யூட்டரான் ஐமேக், மேக் புக் என பல்வேறு புதிய தொழில்நுட்பம் கூடிய பொருட்களை அறிமுகம் செய்து அவற்றில் வெற்றியையும் கண்டது. ரீடெய்ல் ஸ்டோர் களையும் தொடங்கியது இந்தக் காலக்கட்டத்தில்தான். 

# ஆப்பிளின் மொத்த சொத்து மதிப்பு ரஷ்ய பங்குச் சந்தை மதிப்பை விட அதிகம். 

# ஸ்டீவ் ஜாப்ஸ் வீட்டிற்கு அருகே ஆப்பிள் தோட்டம் ஒன்று இருந்தது. அங்கேதான் அவர் சோகமான நேரங்களிலும் மகிழ்ச்சியான தருணங்களிலும் நேரத்தை செலவிடுவதுண்டு. மேலும் அவர் தனது காதலியுடன் செலவிட்ட இடமும் அந்த ஆப்பிள் தோட்டம்தான். ஆகவே தான் தனது நிறுவனத்திற்கு இந்தப் பெயர் வைத்ததாக சொல்லப்படுகிறது. 

# தற்போது எந்த ஐபோன் வாங்கினாலும் அதை ஆன் செய்யும் போது 9.41 என்று மணி காட்டும். இது எதேச்சையான நிகழ்வு அல்ல. மேக்வேர்ல்டு எக்ஸ்போவில் ஸ்டீவ் ஜாப்ஸ் 9.41 மணிக்குதான் ஐபோனை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார். எனவேதான் ஒவ்வொரு ஐபோனிலும் 9.41 இருக்குமாறு வடிவமைக்கப் படுகிறது. 

# 2015-ம் ஆண்டின் நிலவரப்படி ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 29.470 பில்லியன் டாலர். 

# ஆப்பிள் நிறுவனம் போன் தயாரிப்பில் சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

# ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,15,000 

# ஆப்பிள் நிறுவனத்தின் நிகர வருமானம் 53.394 பில்லியன் டாலர் 

# 2012-ம் கணக்கெடுப்பின் படி ஒரு நாளைக்கு உலகம் முழுவதும் 3,40,000 ஐபோன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 

# ஆப்பிள் நிறுவனம் ஒரு நிமிடத்திற்கு 1,99,69,500 ரூபாயை விற்பனை மூலம் பெறுகிறது. 

# ஆப்பிள் தலைமையிடத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சராசரியாக வருடத்திற்கு ரூ.83,20,625 லட்சம் ஊதியம் பெறுகிறார்கள்.

விற்பனை செய்யும் அளவை விட தரம் தான் முக்கியம். தரம் மட்டும்தான் ஒரு வீட்டிலிருந்து பல வீடுகளுக்கு நம் பொருளை கொண்டுச் சேர்க்கும்.

- இது ஸ்டீவ் ஜாப்ஸின் பொன்மொழி.

Monday 11 April 2016

டோனால்ட் டிரம்ப் (Donald Trump) கூரிய தொழில் வெற்றிக்கான 15 விதிகள்:



1.      நீங்கள் பணத்திற்காக மட்டும் உங்கள் வேலையை செய்ய வேண்டாம்.
2.       குறிக்கோளை உயர்வாக  வையுங்கள்  
3.      ஒரு போதும் நீங்கள் செய்யும் காரியத்திலிருந்து பின்வாங்காதீர்கள்.
4.       நீங்கள் செய்யும் விசயங்களில் அதிக தகவல்களை கொண்டிருங்கள்.
5.       திறமையான ஊழியர்கள், குழுக்களை கொண்டிருங்கள்.
6.      கடுமையாக உழையுங்கள்.
7.      உங்கள் உள்ளுணர்வுகளை பின்பற்றுங்கள்.
8.        உங்களை அதிகமாக நம்புங்கள்
9.      நீங்கள் செய்வதை விரும்பிச் செய்யுங்க.
10.தீர்வுகளில் கவனம் செலுத்துங்கள், பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டாம்.
11.  உங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்,ஒரு போதும் உங்கள் தவறுகள் உங்களை கீழே செல்ல விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
12.   எப்போதும் நேர்மறையாக சிந்தியுங்கள் 
13.  வெற்றி பெறுவதற்கு குறுக்கு வழி ஒன்றும்  இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். 
14.  உங்களுக்கு விருப்பமான காரியத்தில் அதிகமான சிக்கல்கள் இருந்தாலும் அந்த காரியலேயே கவனத்தை செலுத்துங்கள்.  
15.   உங்களை வெற்றியாளனாக பாருங்கள்.

Alibaba Group-ன் நிறுவனர் ஜாக் மா-வின் வெற்றிக்கான 10 முக்கிய விதிகள்

ஜாக் மா சீனாவின் தொழிலதிபர். Alibaba Group-ஐ தொடங்கியவர். 2014 ஆம் ஆண்டு சீனாவின் முதல் பெரிய பணக்காரராகவும், 2015 ஆம் ஆண்டு இரண்டாவது பெரிய பணக்காரர் ஆவார். உலகின் 22 வது மிகவும் சக்தி வாய்ந்த மனிதர், 2016 ஆம் ஆண்டில் உலகின் 33 வது கோடிஸ்வரர்சீனாவின் 80 % ஆன்லைன் விற்பனை Alibaba குழுமம் மூலம் நடைபெறுகிறது. இதன் சந்தை மதிப்பு $.212 பில்லியன் டாலர். வருமானத்தின் அடிப்படையில் Alibaba உலகின் 6 வது மிகப்பெரிய இணையத்தளம்.
ஜாக் மா
Alibaba Group-ன் நிறுவனர் ஜாக் மாவின்  10 வெற்றியின் விதிகள் 
1   புறக்கணிப்பை பயன்படுத்துங்கள்.
    ஜாக் மா கல்லூரி நுழைவுத் தேர்வில் 3 முறை தோல்வியடைந்தவர். 30 வெவ்வேறு வேலைகலுக்காக விண்ணப்பித்தபோது அனைத்திலும் நிராகரிக்கப்பட்டவர்.
2. உங்கள் கனவை உயிர்ப்புடன் வைத்திருங்கள் (Keep Your Dream Alive).
3. நிறுவனத்தின்  மதிப்பை உருவாக்குதல், புதுமைமை புகுத்துதல்,  கலாசாரத்தை உருவாக்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள்.
4.  உங்களின் கனவு வெற்றியடையாது, முட்டாள்தனமானது என்று யார் கூரினாலும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.
  • அவர் Alipay என்ற ஆன்லைன் கட்டணம் இணையத்தை தொடங்கிய போது அவரின் ஐடியா முட்டாள்தனமானது என்று கூரினார்கள். இன்று உலகமுழுவதும் அதிகமான ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் Alipay மூலம் நடைபெறுகின்றன.
5.   உங்களை வளர்த்துக்கொள்ள கற்றுகொண்டே இருங்கள். 
6.   ஏதேனும் ஒரு காரியங்களில் கவனத்தை குவியுங்கள்.
7.  உங்கள் நிறுவனத்திற்கு நல்ல பெயரை தேர்ந்தெடுங்கள்.
  • அவர் Alibaba பெயரை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் அந்த பெயர் உலகம் முழுவதும் பிரபலமாக இருந்தது.
8.  முதலில் வாடிக்கையாளர்கள்தான், இரண்டாவது ஊழியர்கள் , மூன்றாவதுதான் முதலீட்டாளர்கள்.
9.  குறை காணாதீர்கள், அதில் உள்ள வாய்ப்புகளை பாருங்கள். 
10.  உங்கள் கனவின் மீது தீராத வெறியை கொண்டிருங்கள்.

Monday 8 February 2016

அனைவருக்கும் வணக்கம்

நான் இந்த வெப்சைட் தொடங்க காரணம் சுய தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்கள் ஒருங்குகினைகும் பொருட்டு தொடங்கப்பட்டது.சுய தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இதில் இணைய வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.